உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேட்டூர் அணையின் நீர் இருப்பு கடந்த ஆண்டு இதே நாளில்( மே01), 101 அடியாக இருந்தது. இந்த ஆண்டு, 53 அடியாக குறைந்துவிட்டது. வரலாறு காணாத வெயிலும், வறட்சியுமே காரணம். அணையின் குறுக்கே பரிசல் மூலம் பக்கத்து ஊர்களுக்கு சென்று வந்த மக்களுக்காக, தற்போது அணைக்குள்ளேயே அரசு பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.

01-05-2024 | 12:03


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், குமரன் சிலை முன் சி.ஐ.டி.யூ.,சார்பில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

06-10-2025 | 18:47


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

06-10-2025 | 14:32


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

06-10-2025 | 14:25


ராமநாதபுரம் அருகே உள்ள அரியமான் கடற்கரையில் படகு துடுப்பு போட்டி நடந்தது.

06-10-2025 | 08:40


மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கி சென்ற இளம்பெண். இடம்: நாடியா, மேற்குவங்கம்.

06-10-2025 | 08:40


காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், மழை நீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.

06-10-2025 | 08:39


தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிய நிலையில் குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

06-10-2025 | 08:39


கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளுக்கு எனக் கூறி, அதிக பரப்பு மற்றும் ஆழத்தில் மண் எடுக்கப்பட்டடுள்ளதால் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ள காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரி.

06-10-2025 | 08:39


சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இரை தேடி வரிசையாக அமர்ந்திருக்கும் நீர் காகங்கள்.இடம் : சோழிங்கநல்லூர்.

06-10-2025 | 06:02