இன்றைய போட்டோ
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2024 நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. இதில் (இடமிருந்து) சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், ஸ்ரீ ஈஸ்வர் தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் ராஜாராம், கற்பகம் குழுமத்தின் பிராண்டிங் மற்றும் சேர்க்கை பிரிவு நிர்வாகி சுப்புராஜ், கற்பகம் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் ஆதி பாண்டியன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்
06-07-2024 | 12:43
மேலும் இன்றைய போட்டோ
ஸ்தம்பித்தது காந்திபுரம்:தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய கூடிய மக்கள் வெள்ளத்தால் கோவை காந்திபுரம் ஸ்தம்பித்தது.
05-10-2025 | 18:22
சாரல் மழை பெய்தாலும் ஆதவனின் ஒளி மேககூட்டங்களிடயே அழகு தான்.இடம்: காரமடை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம், கணுவாபாளையம் .
05-10-2025 | 16:20
பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
05-10-2025 | 07:02
ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சர்வதேச தசரா விழாவில் அம்மாநிலத்தின் நாட்டி என்ற பாரம்பரிய நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள். இடம்: குலு.
05-10-2025 | 07:02
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.
05-10-2025 | 07:02
கடலூர் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் சாமந்தி பூ பூத்து குலுங்கியது.
05-10-2025 | 06:15
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
05-10-2025 | 05:31