இன்றைய போட்டோ
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை அடைந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கரையோரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
30-07-2024 | 13:45
மேலும் இன்றைய போட்டோ
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் டஸ்ஸெல்டோர்ப் நகரில் உள்ள குன்ஸ்ட்பாலஸ்ட் கலை அருங்காட்சியகத்தில், பழங்கால கலை பொருட்களுடன் அப்போது பயன்படுத்திய வாசனை திரவியங்களும் இடம்பெற்றன.
29-10-2025 | 07:36
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் துவங்கியது. இடம்: யாங்கூன்.
29-10-2025 | 07:31
வட்ட வடிவிலான காக்கி நிற தொப்பி அணிந்து வந்த கர்நாடக போலீசாருக்கு நேவி நீல நிறத்தில் புதிய தொப்பி வழங்கப்பட்டு உள்ளது. அறிமுக விழாவில் புதிய தொப்பியுடன் போலீசார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு
29-10-2025 | 07:26
கடல் சீற்றம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அலைகள் அதிகமாக இருந்ததால் மண்ணரிப்பு காணப்பட்டது.
29-10-2025 | 07:22
புயல் காரணமாக பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருந்த பயணிகள்.
29-10-2025 | 07:19
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
28-10-2025 | 19:34