இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நதிக்கரையோரத்தில் படகுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டுக்கென, ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
09-09-2025 | 06:07
அடையாறு ஆற்றில் மாலை வேளையில் வலையின் மூலம் மீன் படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.இடம் : பெசன்ட் நகர்
08-09-2025 | 22:45
திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.
08-09-2025 | 22:45
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆலந்தா கிராமத்தில் தோட்டத்தில் பயிரிட்ட தடியங்காய் காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் காய்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர்.
08-09-2025 | 22:21
முகத்துவாரம் பகுதியில் கடல்நீர் கலக்கும் இடத்தில் உள்ள மணல்களை தூர்வாரி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறை ஊழியர்கள்.இடம் : சீனிவாசபுரம்
08-09-2025 | 20:09