உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சபாஷ் பயணிகளே...நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில் தொட்டபெட்டா டீகார்டன் அருகே கோத்தகிரி சாலையில் விழுந்த மரத்தை பஸ்களில் சென்ற பயணிகளே அகற்றியதால் உடனடியாக போக்குவரத்து சீரானது.

21-08-2024 | 12:10


மேலும் இன்றைய போட்டோ

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறும், 51வது ஆண்டு கேக் கண்காட்சியில் காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி தெய்வம் போல தயாரிக்கப்பட்ட கேக்.

12-12-2025 | 06:12


பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலையை ஜதி பல்லக்கில் வைத்து, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து அவர் வாழ்ந்த இல்லம் நோக்கி கவர்னர் ரவி, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் தூக்கி வந்தனர்.

12-12-2025 | 06:07


கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அழகிய வித்யாசமான குறில்களை தயாரித்து வழங்குகின்றார் இடம் : ரேஸ்கோர்ஸ் காஸ்மோக் பாலித்தன் கிளப்

11-12-2025 | 22:29


அந்தி சாலையும் மாலை வேளையில் கதிரவன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் இடமான படகு குழாமில் படகு சவாரி செய்யும் நபர்.இடம் : முட்டுக்காடு

11-12-2025 | 21:25


செம்பரம்பாக்கம் ஏரியின் கரை சீரமைத்து பலப்படுத்தப்பட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர்

11-12-2025 | 21:24


ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினர் இறந்தவர்களுக்கு வரசாவு சடங்கு செய்ய கிராமம் அருகேவுள்ள இடத்திற்கு சென்றனர்.

11-12-2025 | 21:24


திருப்பூர் பல்லடம் ரோடு, ரமணாஸ் ஓட்டல் குமரகம் ஹாலில் தேசிய சிந்தனை பேரவை தமிழ்நாடு சார்பில் வந்தே மாதரமும் பாரதியும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

11-12-2025 | 21:24


மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த தினத்தை ஒட்டி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் , மற்றும் தமிழ் சங்க துணை தலைவர் ராகவன் நாயுடு, செயலாளர் முகுந்தன், மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்

11-12-2025 | 21:23


கடலூர் புதுப்பாளையத்தில் ஐய்யப்பா பக்தர்கள் சார்பில் ஐயப்பன் விக்ரக பூஜை நடந்தது.

11-12-2025 | 21:22