இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் ஸ்நோகுவால்மி ஆற்றில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நகர மையத்தில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
13-12-2025 | 09:12
திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. பவானி கூடுதுறையில் நடந்த ஆராட்டு உற்சவத்திற்கு பின் திருப்பூரில் மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅய்யப்பன்.
13-12-2025 | 08:56
ஊட்டி தலைகுந்தா பகுதியில், பனிமூட்டம் அதிகரித்ததால், கடும் குளிரான காலநிலை நிலவியது.
13-12-2025 | 08:51
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். கோல்கட்டாவில் உள்ள துணி கடையில் இவரது படம் இடம் பெற்ற ஜெர்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
13-12-2025 | 08:25
அந்தமான் பியோட்னாபாதில் உள்ள பூங்காவில் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
13-12-2025 | 08:20
சட்டவிரோத இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட், குஜராத் உட்பட 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட வீரர்.
13-12-2025 | 08:17