உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கொட்டித் தீர்த்த கனமழையால் தேவாலயத்தை மழை நீர் சூழ்ந்தது . கடலூர் புதுச்சேரி சாலை கங்கணாங்குப்பம்.

01-12-2024 | 11:18


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. பவானி கூடுதுறையில் நடந்த ஆராட்டு உற்சவத்திற்கு பின் திருப்பூரில் மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅய்யப்பன்.

13-12-2025 | 08:56


ஊட்டி தலைகுந்தா பகுதியில், பனிமூட்டம் அதிகரித்ததால், கடும் குளிரான காலநிலை நிலவியது.

13-12-2025 | 08:51


அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். கோல்கட்டாவில் உள்ள துணி கடையில் இவரது படம் இடம் பெற்ற ஜெர்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

13-12-2025 | 08:25


அந்தமான் பியோட்னாபாதில் உள்ள பூங்காவில் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.

13-12-2025 | 08:20


சட்டவிரோத இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட், குஜராத் உட்பட 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட வீரர்.

13-12-2025 | 08:17


புதுச்சேரி இசிஆர் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள லாஸ்பேட்டை காவல் நிலையம்.

12-12-2025 | 22:51


புதுச்சேரி ஊசுடேரியில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெலிக்கான் பறவையை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

12-12-2025 | 21:08


மார்கழி மாதம் துவங்கவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சி பகுதியில் விற்பனைக்காக தயாராகும் வண்ண கோலப் பொடிகள்..

12-12-2025 | 21:08


நிலையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தினர் எழும்பூர் பகுதியில் பேரணியாக சென்றனர்.

12-12-2025 | 21:08