இன்றைய போட்டோ
திருவண்ணாமலை கிரிவல பாதையில் குழந்தைகளுடன் வலம் வருபவர்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு கை வலிக்க 14 கிலோமீட்டர் நடப்பர். அந்த சிரமத்தை குறைக்கும் வகையில் 300 ரூபாய் வாடகை கொடுத்தால், அதற்கான வண்டியை வாடகைக்கு தருகின்றனர். அப்படி வாடகைக்கு எடுத்த வண்டியில் குழந்தையை அமர வைத்து தள்ளிக் கொண்டு சென்ற தாய்.
08-08-2025 | 10:31
மேலும் இன்றைய போட்டோ
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.
28-10-2025 | 13:40
அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்
28-10-2025 | 13:39
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி (அக்-27) விமரிசையாக நடந்தது.
28-10-2025 | 12:06
கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
28-10-2025 | 11:25