உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வடமாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், உத்தராகண்டில் மேகவெடிப்பு ஏற்பட்ட நிலையில், ஹிமாச்சல பிரதேசம் குலு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு சாலையை உடைத்துக் கொண்டு பாய்ந்த வெள்ளம்.

20-08-2025 | 12:02


மேலும் இன்றைய போட்டோ

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

30-10-2025 | 09:15


பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக ஊஞ்சல் சேவை உத்சவத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

30-10-2025 | 08:25


தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் பிரசிலீயாவில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் நோயாளிகளுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தர சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன.

30-10-2025 | 08:21


ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி ஈஸ்வரர் சன்னதி விமானத்தில் சிமென்ட் கலவை ஒன்பது ஆண்டுகளாக பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது.

30-10-2025 | 08:17


சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 16 கண் மதகில் அக் 27ல் உபரி நீர் திறப்பை நிறுத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த ஏராளமான மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதந்தன.

30-10-2025 | 08:13


ஒரு கிலோ தக்காளி விலை 15 ரூபாய்க்கும் கீழே சென்றதால், விரக்தியில் திருச்சி காவிரியாற்றில் விவசாயிகள் 2 டன்னுக்கும் மேற்பட்ட தக்காளிகளை கொட்டினர்.

30-10-2025 | 08:08


ஆசிய இளையோர் கபடி போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபினேஷூக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 1 லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் அபினேஷின் தாய் தன லட்சுமி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ். இடம்: சென்னை.

30-10-2025 | 08:05


தென்காசியில் நடந்த அரசு விழாவிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை கழுநீர் குளம் என்ற இடத்தில் சிலம்பம் சுழற்றி சிறுவர்கள் வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, தானும் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார் ஸ்டாலின்.

30-10-2025 | 07:56


காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.

30-10-2025 | 07:32