இன்றைய போட்டோ
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க் பகுதியில் தற்போதும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அங்கு, 200 குதிரைகளும், 68 சாரட் வாகனங்களும் உள்ளன. இந்தத் தொழிலில், 200 பேர் ஈடுபட்டுள்ளனர். குதிரைகள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை சாலையிலேயே சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இந்த குதிரை பூட்டிய சாரட் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, வரும், 2026ம் ஆண்டு ஜன., 1ல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், குதிரைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதாகவும், தொழிலில் ஈடுபட்டுள்ள 200 பேர் பாதிக்கப்படுவர் என்றும் கூறி, தடையை எதிர்த்து போராட்டம் நடந்தது.
24-08-2025 | 11:58
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் பெய்து வரும் மழையால் திருமங்கலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
28-10-2025 | 10:45
புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வானிலை மாற்றத்தால் கடலில் எழுந்த ராட்சத அலைகள். இடம்: பெசன்ட் நகர்.
28-10-2025 | 10:45
மோந்தா புயல் காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்தது. இடம். காமராஜர் சாலை, மெரினா..
28-10-2025 | 10:44
மோந்தா புயல் எதிரொலியாக, சென்னை மெரினா சீனிவாசபுரம் கடற்கரையில் வரிசையாக நிற்கும் மீன்பிடி படகுகள்.
28-10-2025 | 10:43
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.
28-10-2025 | 07:34
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
28-10-2025 | 07:17
கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
28-10-2025 | 06:45