இன்றைய போட்டோ
அச்சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மறைப்பு ஏற்படுத்தாமல் புது கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், புழுதி பறந்து நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். நம் நாளிதழ் செய்தி எதிராலியாக தற்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்தை சுற்றி துணியால் மறைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
29-09-2025 | 07:50
மேலும் இன்றைய போட்டோ
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
02-10-2025 | 15:17
விஜயதசமியை முன்னிட்டு தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு "அ"னா "ஆ"வன்னா எழுத கற்றுத்தரும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடந்தது.
02-10-2025 | 10:47
தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.
02-10-2025 | 10:16
ஊட்டியில் காலையில் வெயிலான காலநிலை நிலவி வந்த நிலையில், கேத்தி பள்ளதாக்கு பகுதியின் பசுமையான தோற்றம் பயணிகளை பரவசப்படுத்தியது.
02-10-2025 | 10:16
விஜயதசமியையொட்டி, கோவை ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த துர்கா மகாலட்சுமி, சரஸ்வரி தாயார் ஆகிய முப்பெரும் தேவியர்.
02-10-2025 | 10:15
விஜயதசமி முன்னிட்டு, கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுத பயிற்றுவிக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது .
02-10-2025 | 09:05