உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.

04-10-2025 | 07:01


மேலும் இன்றைய போட்டோ

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மணக்குள விநாயகர். இடம்: புதுச்சேரி

01-01-2026 | 11:16


உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், சீலநாயக்கன்பட்டி பகுதியில் இரு புறங்களிலும் செழித்து வளர்ந்துள்ள மரங்கள், சாலையை பசுஞ்சாலையாக மாற்றியுள்ளன.

01-01-2026 | 09:05


2026ம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் கல்லூரி மாணவிகள் அதன் வடிவமைப்பை கைகளில் தாங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இடம்: கோவை வேளாண் பல்கலை.

01-01-2026 | 09:02


கடந்தாண்டு துர்சம்பவங்களை மறப்போம்; நடப்பாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க பிரார்த்திப்போம் ,' என்பதை வெளிப்படுத்தும் ஒளி வட்டம். இடம்: பந்தலூர்.

01-01-2026 | 08:58


ஜம்மு காஷ்மீரின் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான குல்மார்க்கில், பனியில் வரையப்பட்ட புத்தாண்டு வாழ்த்துகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.

01-01-2026 | 08:54


ஆங்கிலப் புத்தாண்டு 2026 இன்று பிறந்தது. இதற்காக திருப்பூரில் உள்ள கேக் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட விதவிதமான வண்ணமிகு கேக்குகள்.

01-01-2026 | 08:07


திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் இருந்து, திருநெல்வேலி கால்வாய் பிரிந்து செல்கிறது. இங்குள்ள அணையின் பக்கவாட்டு சுவரில் ஏற்பட்டுள்ள உடைப்பால் வீணாக வெளியேறிய தண்ணீர்.

01-01-2026 | 07:46


ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவியை தரிசிக்க நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை துணை ராணுவப்படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து சோதனையிட்டனர். இடம்: கத்ரா, ஜம்மு.

01-01-2026 | 07:42


ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சந்தன்வாரியில், பனிப்பொழிவுக்கு பின், வெண்பனி போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளிக்கும் மலைகள்.

01-01-2026 | 07:37