இன்றைய போட்டோ
ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்துமஸ் தீவின் அடர்ந்த காடுகளில், உலகில் எங்கும் காண முடியாத சிவப்பு நண்டுகள் வசிக்கின்றன. இனப்பெருக்கம் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரையை நோக்கி அவை செல்கின்றன. இவ்வாறு 5 கோடிக்கும் அதிகமான நண்டுகள் நகர்வதால் இடையூறு ஏற்படாத படி அதன் வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
24-10-2025 | 07:00
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. குதூகலத்துடன் சுற்றுலா பயணிகள்.
24-10-2025 | 10:44
வேலூர் மாநகராட்சி, கன்சால் பேட் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேலூர் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
24-10-2025 | 08:04
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பிரச்னை தலை தூக்கி உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து உள்ளன.
24-10-2025 | 07:33
சகோதர பாசத்தை கொண்டாடும் பாய் தூஜ் பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. யமுனை நதியில் நீராடி தன் சகோதரின் நெற்றியில் திலகமிட்டு பிரார்த்தனை செய்த சகோதரி. இடம்: பிரயாக்ராஜ், உபி
24-10-2025 | 06:54
திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன. மேலும் மழை வருமுன் எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்றுவோம் என்ற நோக்கத்துடன் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. இடம்: திருநெல்வேலி.
24-10-2025 | 06:49
கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் உள்ள யூ - டர்ன்னால் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.
23-10-2025 | 21:06