இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தொல்காப்பிய பூங்காவினுள் வளைந்து நெளிந்து செல்லும் சிற்றோடை, பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது. இடம்: ராஜா அண்ணாமலைபுரம், சென்னை
25-10-2025 | 06:31
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காண்போரை கவரும் வண்ணத்திலும், குழந்தைகளுக்கு பிடிக்கும் ஏராளமான சிற்பங்களுடனும் இந்த பூங்கா உள்ளது.
25-10-2025 | 06:31
விருத்தாசலம் அடுத்த எருமனூரில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளன.
25-10-2025 | 02:04
ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. குதூகலத்துடன் சுற்றுலா பயணிகள்.
24-10-2025 | 10:44
வேலூர் மாநகராட்சி, கன்சால் பேட் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேலூர் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
24-10-2025 | 08:04
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பிரச்னை தலை தூக்கி உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து உள்ளன.
24-10-2025 | 07:33
ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்துமஸ் தீவின் அடர்ந்த காடுகளில், உலகில் எங்கும் காண முடியாத சிவப்பு நண்டுகள் வசிக்கின்றன. இனப்பெருக்கம் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரையை நோக்கி அவை செல்கின்றன. இவ்வாறு 5 கோடிக்கும் அதிகமான நண்டுகள் நகர்வதால் இடையூறு ஏற்படாத படி அதன் வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
24-10-2025 | 07:00