இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஐரோப்பிய நாடான ஜெர்மனி அணுமின்சக்தி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குண்ட்ரெம்மிங்கன் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதில் இருந்த தலா 480 அடி உயரமுள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
26-10-2025 | 07:37
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பெய்த கனமழையில் சாலை ஒன்றில் வெள்ளம் போல ஓடிய மழை நீர்.
26-10-2025 | 07:31
மழையில் நனைந்த அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாங்க மறுப்பதால், ஈர நெல்லை காய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இடம்: திருநெல்வேலி
26-10-2025 | 07:27
பருவமழை துவங்கி உள்ள நிலையில், முறையாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்திருக்கும் பல்லாவரம் ஏரி.
25-10-2025 | 18:04
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25-10-2025 | 18:04