இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ராஜஸ்தானின் அஜ்மீரில் ஒட்டக கண்காட்சி விரைவில் நடக்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டு உள்ளன.
26-10-2025 | 08:03
வட மாநிலங்களில் சூரியனை வழிபடும் சத் பூஜையின் போது மூங்கில் கூடையில், சோளம், கரும்பு, தேங்காய், தீபம், பழங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்கான விற்பனை, சந்தையில் சூடுபிடித்தது. இடம்: கான்பூர், உத்தரபிரதேசம்.
26-10-2025 | 08:00
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகே குருவிகுளத்தில் மக்காச்சோளத்தில் பூச்சி மருந்து கலந்து வைத்ததால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பலியாகின.
26-10-2025 | 07:41
மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை பூதூர் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து நெல் உலர்த்தப்படுகிறது.
26-10-2025 | 07:41
ஐரோப்பிய நாடான ஜெர்மனி அணுமின்சக்தி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குண்ட்ரெம்மிங்கன் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதில் இருந்த தலா 480 அடி உயரமுள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
26-10-2025 | 07:37