உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விஐடி சென்னையில் டெக்னோ விஐடி 25 என்ற தொழில்நுட்ப விழா நடந்தது. இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட, சென்னையில் உள்ள தாய்லாந்து துணை தூதரகத்தின் துணை தூதர் ரச்சா அரிபர்க் உள்ளிட்டோர்.

01-11-2025 | 13:45


மேலும் இன்றைய போட்டோ

இந்திய தர நிர்ணய அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே மினி மாரத்தான் நடந்தது.

01-11-2025 | 10:39


அமராவதி அணையில், மழை பெய்து வருவதால், மீன் பிடித்தல் குறைந்து பரிசல்கள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

01-11-2025 | 08:16


திருப்பூர் மாவட்டம் அமராவதி பழைய ஆயக்கட்டு குமரலிங்கம் பகுதியில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

01-11-2025 | 08:12


ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பிரதான புல்தரை மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது.

01-11-2025 | 08:10


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் புதிய சத்திரம் திறப்பு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சத்திரத்தை திறந்து வைத்தார். உடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.

01-11-2025 | 08:07


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 'சொத்பீஸ்' என்ற உலக புகழ்பெற்ற ஏல நிறுவனத்துக்காக, இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கத்தேலன், தங்கத்தால் ஆன கழிப்பறையை உருவாக்கி உள்ளார். இதன் மதிப்பு 90 கோடி ரூபாய்.

01-11-2025 | 06:58


தக்காளி விலை கடுமையாக சரிந்தாலும், மழையால் பாதிக்கப்பட்டதாலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தக்காளியை டிராக்டரில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டினர். இடம்: சிக்கமகளூரு, கர்நாடகா.

01-11-2025 | 06:48


மூன்று மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள மெரினா நீச்சல் குளத்தில், உற்சாகமாக குளியல் போட்டு குதூகலித்த சிறுவர்கள்.

01-11-2025 | 06:41


தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,040வது சதய விழாவை யொட்டி, பெரிய கோவில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பரதநாட்டியமாடி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

01-11-2025 | 06:38