இன்றைய போட்டோ
கிழக்காசிய நாடான தென்கொரியாவில் அரசு கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் வர்த்தக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைநகர் சியோவில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
09-11-2025 | 07:40
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டியில் கடந்த இரு நாட்களில் திரண்ட சுற்றுலா பயணிகளால், படகு இல்ல சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
10-11-2025 | 07:50
கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு நடனம் நடந்தது.
10-11-2025 | 07:49
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் நடந்த அறுவடை திருவிழாவை முன்னிட்டு, நெற்கதிர் அறுவடையில் ஈடுபட்ட பழங்குடியினர்.
10-11-2025 | 07:41
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.
10-11-2025 | 07:38
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில உள்ள கங்கை ஆற்றில், ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர்.
10-11-2025 | 07:35
பாஜ மூத்த தலைவர் அத்வானி, தன் 98வது பிறந்த நாளை கொண்டாடினார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
10-11-2025 | 07:29