இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள். இடம்: பழநி-திண்டுக்கல் ரோடு, விருப்பாட்சி.
31-01-2026 | 09:09
மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தில், டில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
31-01-2026 | 06:27
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் சமீபத்தில் நிலவிய கடும் பனிப்பொழிவுக்குப் பின், வெண்ணிற பனி போர்த்திய இமயமலைத் தொடரின் பின்னணியில் கம்பீரமாக நிற்கும் குதிரைகள். பனி மூடிய மலைகளும், உறைபனியில் நனையும் குதிரைகளும் இணைந்து சிம்லாவை கனவு உலகம் போல மாற்றியுள்ளன.
31-01-2026 | 06:23
புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் தை வெள்ளியை முன்னிட்டு குடும்பங்கள் சுபிட்சமாக இருக்க வேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
30-01-2026 | 23:43
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற ஆறு மாணவர்கள். இடமிருந்து: தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சத்யா ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஜான்சன் ஜான் ரோஷன், திருவனந்தபுரம் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ராஜராஜன், தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அபூர்வா ஹரி மற்றும் மேடிசன் குரூப் முன்னாள் மூத்த துணைத் தலைவர் திவ்யநாதன்.
30-01-2026 | 23:06
சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடந்த மாதாந்திர மன்ற கூட்ட தொடரில் கவுன்சிலர்கள் கதை பேசிக்கொண்டிருந்தனர்
30-01-2026 | 23:05
சிவகங்கை மாவட்டம் சிராவயல் காந்தி அடிகள் சந்திப்பு நினைவு அரங்கத்தை திறந்து வைத்து தோழர் ஜீவா காந்தியடிகள் சந்திப்பு சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
30-01-2026 | 23:05