இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.
10-11-2025 | 07:38
பாஜ மூத்த தலைவர் அத்வானி, தன் 98வது பிறந்த நாளை கொண்டாடினார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
10-11-2025 | 07:29
உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே உள்ளது மானா கிராமம். நம் நாட்டின் முதல் கிராமமாக இது அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 10,499 அடி உயரத்தில் உள்ள இக்கிராமத்தில் அமைந்த முதல் டீக்கடையில், பத்ரிநாத் வரும் பக்தர்கள் தேநீர் அருந்தி செல்கின்றனர்.
10-11-2025 | 07:26
ஆப்ரிக்க நாடான அங்கோலாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டின் சார்பில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
10-11-2025 | 07:22
ஐப்பசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10-11-2025 | 06:54
சென்னையில் நடந்த மாநில வில்வித்தை போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற, மதுரவாயல் அர்ஜூனா வில்வித்தை பயிற்சி நிலைய வீரர்- வீராங்கனையருக்கு, காவல்துறை முன்னாள் அதிகாரி எம்.கருணாநிதி பரிசு வழங்கி பாராட்டினார்.
10-11-2025 | 06:51
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராக்பெல்லர் வணிக வளாக மையத்தின் முகப்பில், 1931ம் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிக்கப்படும். இந்த ஆண்டுக்கான மரத்தை, நியூயார்க்கை சேர்ந்த ஜூடி ரஸ் தானமாக வழங்கினார்.
10-11-2025 | 06:46