உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடக்கும் ஓவிய கண்காட்சியில் உள்ள ஓவியம். இடம்: எழும்பூர், சென்னை.

12-11-2025 | 06:32


மேலும் இன்றைய போட்டோ

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கன்னட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கட்சியினர் தங்கள் வாகனங்களை வள்ளலார் நகர் பஸ் நிலையத்தில் அத்துமீறி நிறுத்தினர்.

12-11-2025 | 06:51


பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 12.80 கோடி மதிப்பில் பிங்க் ரோந்து வாகன சேவைகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இடம்: தலைமை செயலகம், சென்னை.

12-11-2025 | 06:51


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த வாரம் கல்மேகி புயல் வீசியதில் 200 பேர் பலியாகினர். தற்போது பங் வோங் புயல் தாக்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது. இடம்: நவோடாஸ்.

11-11-2025 | 15:01


சீக்கியர்களுக்கு நீதி என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரிவினைவாத அமைப்பு, காலிஸ்தான் பிரிவினைவாத கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட ஓட்டெடுப்பு நடத்த உள்ளது. மான்ட்ரியல் நகரில் காலிஸ்தான் ஆதரவு குழுவினர் 500 கார்கள் அடங்கிய பேரணியை நடத்தினர்.

11-11-2025 | 14:58


மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு நீர் நிரம்பி காட்சியளிக்கும் ஆழியாறு ஆணை, காண்போர் மனதை வசீகரிக்கிறது.

11-11-2025 | 14:51


நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதி வயல்களில் காணப்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள்.

11-11-2025 | 14:45


அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இடம்: பல்லவன் இல்லம், சென்னை.

11-11-2025 | 14:43


வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கிவிட்டது. மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பாயும் நர்மதா நதியின் மீது பனி படர்ந்த அதிகாலை வேளையில் சுகமாக பறந்து சென்ற குளிர்கால பறவைகள்.

11-11-2025 | 14:42


டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

11-11-2025 | 06:43