உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தாய்லாந்தின் நகோன் பாத்தோம் மாகாணத்தில், தா சின் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, அங்குள்ள உணவகத்தின் உள்ளே நீர் புகுந்தது. வெள்ள நீரில் மீன்கள் துள்ளி விளையாடி கொண்டிருக்க அதனை ரசித்த படியே, வாடிக்கையாளர்கள் உணவை ருசித்துக் கொண்டிருந்தனர்.

15-11-2025 | 08:37


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி தாவரவியல் பூங்காவில், சாரல் மழை, கடும் மேக மூட்டமான காலநிலையை ரசித்த படி செல்லும் சுற்றுலா பயணிகள்.

15-11-2025 | 08:32


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 7வது நாளன்று நடைபெறும் தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், 71 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.

15-11-2025 | 07:27


பீஹார் தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றதை மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய தொண்டர்கள். இடம்: பாட்னா.

15-11-2025 | 07:16


பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை டில்லி பாஜ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்து, கட்சியினரின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

15-11-2025 | 07:16


திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் கிராமத்தில், பிஏபி எனும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசான திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட வாய்க்காலின் கரை உடைந்து, ஊருக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்.

14-11-2025 | 07:57


டில்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தையடுத்து, தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களுக்கு சொந்தமான வீடு உள்ள ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், கரீமாபாத் கிராமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

14-11-2025 | 07:49


பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் விழா, பல்வேறு நிகழ்வுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சித்ராவதி ஆற்றங்கரையில் கண்கவர் லேசர் ஒளிக்காட்சி துவங்கியது. இது வரும் 23ம் தேதி வரை தினமும் இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்.

14-11-2025 | 07:37


திருநெல்வேலி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் 15 கோடி ரூபாய் மதிப்பில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மழைக்கே தண்ணீர் தேங்கி காட்சியளித்தது. வடிகால் கட்ட மறந்திருப்பாங்களோ?

14-11-2025 | 07:26


தென்மேற்கு பருவமழை, காலத்துக்கு பின், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யும் நிலையில், வனப்பகுதியில் மரங்கள் துளிர்விட்டு பசுமைக்கு மாறி வருகின்றன. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி

13-11-2025 | 10:38