உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டு உள்ள தங்கத்தேருக்கு டிசம்பர் 6ம் தேதி வெள்ளோட்டமும், டிசம்பர் 7ம் தேதி சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

18-11-2025 | 06:49


மேலும் இன்றைய போட்டோ

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் துபாய் ஏர்ஷோ 2025 கண்காட்சியில், இந்தியாவின் அரங்கை திறந்து வைத்த ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேத்.

18-11-2025 | 06:40


நாட்டின் முதல் துணை பிரதமரும், சுதந்திர போராட்ட வீரருமான சர்தார் வல்லபாய் படேலின், 150வது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஒற்றுமை ஊர்வலத்தில் திரளாக பங்கேற்ற மக்கள்.

18-11-2025 | 06:37


சவுதியில் நடந்த விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர், தங்களின் பயணத்தை துவக்கும் முன் எடுத்துக்கொண்ட மொபைல்போன் படம்.

18-11-2025 | 06:15


பகலில் அடிக்கும் வெயிலை தாங்க முடியாமல் துப்பட்டா மற்றும் குடை பிடித்து வெயிலிருந்து தப்பிக்கும் பெண்கள். இடம் கோவை, ரயில் நிலையம்

17-11-2025 | 12:37


கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி உடுமலை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள் .

17-11-2025 | 12:16


கார்த்திகை சோமவார்த்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

17-11-2025 | 09:11


கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மதுரை மேல மாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

17-11-2025 | 09:05


களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இடம்: உடுமலை.

17-11-2025 | 08:28


குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் தென்பட்டாலும், அவ்வப்போது மலைகளை தழுவி செல்லும் மேகம் அனைவரையும் பரவசப்படுத்துகிறது. இடம்: குன்னூர் அருகே, கோடேரி கிராமம்.

17-11-2025 | 08:24