இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடலூர் அடுத்த மாளிகைமேடு பஸ் நிறுத்தம் அருகே ஹைட்ராலிக் கதவை மூடாமல் வந்ததாக அபராதம் விதித்த பரிசோதகரிடம் பஸ் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
27-11-2025 | 18:47
திருநெல்வேலி மாவட்டம் திடியூர் அருகே தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் குறுக்கிடும் பச்சையாறு அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்..
27-11-2025 | 18:47
சிவகங்கை கோர்ட்டில் அமைச்சர் பெரியகப்பன் மனைவி, மகனுடன் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தனர்.
27-11-2025 | 18:46
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சாங்லா மாகாணத்தின் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்புகளையும், சாலைகளையும், சூழ்ந்த வெள்ளத்தால் மிதக்கும் வாகனங்கள்.
27-11-2025 | 08:36
ஹாங்காங் நியூ டெரிட்டரிஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரியும் கட்டடங்கள்.
27-11-2025 | 08:32
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தரமற்ற இருமல் மருந்து அருந்திய 22 குழந்தைகள் கடந்த மாதம் பலியானதையடுத்து, அந்த மருந்து விற்பனை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலாவில் பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற இருமல் மருந்து பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
27-11-2025 | 08:30
கார்த்திகை மாத திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, ஸ்ரீ தேவி, பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27-11-2025 | 08:14