இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பிய படி, 18 படிகளில் ஏறிய பக்தர்கள்.
28-11-2025 | 08:37
அடுத்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், 'தி ஜிஞ்சர் பிரெட் சிட்டி' என்ற இஞ்சி ரொட்டியால் உருவாக்கப்பட்டிருந்த நகரத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பெண்.
28-11-2025 | 08:12
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பெரும்பாலான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பணியை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் போலீசாரின் தடுப்பைத் தாண்டி தலைகீழாக குதித்தார். இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
28-11-2025 | 08:01
குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், தாஜ்மஹால் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து காபியை ருசித்தபடி, அதன் அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
28-11-2025 | 07:49
கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை இன்று பிரதமர் மோடியை திறந்து வைத்தார்.
28-11-2025 | 07:43