இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, திருமுல்லைவாயில், செந்தில் நகர், காமராஜர் தெருவில் உள்ள வீட்டுக்குள் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் ஓடி விளையாட முடியாத பாப்பா, கட்டிலே கதி என்று அமர்ந்துள்ளது.
04-12-2025 | 07:17
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மஹா தீபம் ஏற்றும் போது, கோவிலுக்குள் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
04-12-2025 | 07:12
டிட்வா புயலால் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் பாம்பன் மீனவர்களுக்கு தடை விதித்திருந்தனர். தற்போது மழை குறைந்த நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்தனர்.
04-12-2025 | 06:59
கார்த்திகை தீபா விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
03-12-2025 | 23:59
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் லட்ச தீப ஒளியில் ஜொலித்தது.
03-12-2025 | 19:55
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வார்டில் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிற்றரசுவின் அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
03-12-2025 | 19:34
கார்த்திகை தீபம் முன்னிட்டு கவர்னர் ரவி மற்றும் குடும்பத்தினர், சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.
03-12-2025 | 19:27