உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தாமிரபரணிக்குள் குப்பை...:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் பேரூராட்சியில் சேரும் அனைத்து குப்பைகளையும் கொட்டி, நீர், சூழல் மாசு ஏற்படுத்துகின்றனர்.

09-12-2025 | 22:56


மேலும் இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் காலண்டர் வெளியானதை தொடர்ந்து, மதுரை பெத்தானியாபுரத்தில் நாளிதழ்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்.

11-12-2025 | 12:17


ஊட்டி அருகே சூட்டிங் மட்டம் பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை காண வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

11-12-2025 | 07:40


பருவமழையை தொடர்ந்து, பனி படர்ந்து காணப்படும் உடுமலை அமராவதி அணை கரை காண்பதற்கு ரம்யமாக உள்ளது.

11-12-2025 | 07:37


மனித உரிமைகள் தினத்தையொட்டி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்.

11-12-2025 | 07:34


சென்னை அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் தேங்கியிருந்த மணல் திட்டுகளை தூர்வாரி, தண்ணீர் செல்ல வழி செய்யும் பணி நீர்வளத்துறை சார்பில் நடந்து வந்தது. தற்போது அப்பகுதி முழுவதும் தூர்வாரப்பட்டு, எவ்வளவு மழைநீர் வந்தாலும் கடலுக்குள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இடம்: பட்டினம்பாக்கம்.

11-12-2025 | 07:25


விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.

11-12-2025 | 07:04


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் ஓடும் ஜீலம் நதி நீர் நிறைந்து காணப்படும். ஆனால், தற்போது வறண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் நிலவும் தீவிர வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கமே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் ஜீலம் நதிக்கு முக்கிய பங்கு உள்ளதால், இது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

10-12-2025 | 22:44


தூக்கமின்மை என்பது பலருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அதிலும், வயதானவர்கள் நல்ல தூக்கத்திற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மையம் ஒன்றில் மெல்லிய இசைக்கருவிகளை எழுப்பி தூங்க வைக்கின்றனர்.

10-12-2025 | 22:41


தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாகஉதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பிங்க் பெட்ரோல் போலீஸ் வாகனம். இதில் ஓட்டுபவர் முதல்சிறப்பு உதவி ஆய்வாளர் வரை அனைவரும் பெண்களாக இருப்பர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்களில் அதிகாரிகள் வலம் வருவர். பெண்களும் தயக்கமின்றி இவர்களிடம் புகார் தருவர். அந்த வாகனத்தை ஓட்டுபவரும், அதில் பயணிப்பவரும் ஆண்களாகவே இருந்தனர். இன்று( டிச.,10) இது பிங்க் பெட்ரோல் வாகனத்தின் அசல் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே. இடம்: கோவை காந்திபுரம் காவல்நிலையம்

10-12-2025 | 22:41