உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஓடும் யமுனை நதியை பெண் தெய்வமாக கருதி, ஆண்டிற்கு ஒரு முறை பல வண்ண புடவைகளால் அலங்கரித்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். 'சூன்ரி மனோரத் சேவா' எனப்படும் இந்த விழாவிற்காக, 200க்கும் அதிகமான புடவைகள் பயன்படுத்தப்பட்டன.

10-12-2025 | 07:46


மேலும் இன்றைய போட்டோ

இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக, மழையில் நனைந்த படி சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளியை பார்த்த இந்த பெண்மணி, தன் குடையை அவருக்கு பிடித்து அவர் மழையில் நனையாமல் சாலையைக் கடக்க உதவி செய்தார். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல்.

10-12-2025 | 07:51


அம்பத்தூர் அயப்பாக்கம் ஏரியில் அதிகளவில் கழிவுநீர் கலப்பதால், அங்கு அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.

09-12-2025 | 22:59


ஊட்டி அருகேவுள்ள பைகாரா ஏரியில், ஸ்பீட் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் .

09-12-2025 | 22:59


ஊட்டி அருகே சூட்டிங்மட்டத்திற்கு, இயற்கை காட்சிகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர்.

09-12-2025 | 22:59


ஊட்டி அருகே வென்லாக்டவுன் வைகுதியில் , அன்னிய மரங்கள் ஆகற்றப்படாமல் உள்ளது.

09-12-2025 | 22:58


உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.

09-12-2025 | 22:58


சில நாட்களாக பெய்த மழையால் சிவகங்கை கீழ் பாத்தி கண்மாயில் தண்ணீர் பெருகி கடல் போல் காட்சி அளிக்கிறது.

09-12-2025 | 22:57


மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.

09-12-2025 | 22:56


மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினர்.

09-12-2025 | 22:56