இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காவலர் கோதண்டபாணி தனது மகள் பிரதிக்ஷாவிற்கு தவறான சிகிச்சை அளித்தது கால் ஊனமானதால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் புகார் அளிக்க வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
21-01-2026 | 06:32
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக பனி கொட்டி வருகிறது. குறிப்பாக கம்சத்கா தீபகற்பத்தில் பல மாதங்களில் பொழிய வேண்டிய பனி, சில நாட்களிலேயே கொட்டியுள்ளது. இதனால் 16 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. சில இடங்களில் 9வது மாடி வரை பனி குவிந்திருந்தது.
21-01-2026 | 06:30
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள காயத்ரி தீர்த்த சாந்திகுஞ்ச் மையத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய உடையணிந்து பிரமாண்டமான யாத்திரையில் பங்கேற்றனர்.
21-01-2026 | 06:23
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினம் கிராமத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளால கடலில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகள்.
20-01-2026 | 22:39
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால், கோட்டை ரயில் நிலையம் அருகே பாரிமுனை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
20-01-2026 | 22:35