இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வடலூர், சத்திய ஞான சபை பெருவெளியில் மரத்தடி நிழலில் தங்கி உள்ள முதியோர் மற்றும், ஆதரவற்றோர்.
02-06-2026 | 12:58
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 10,625 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
02-06-2026 | 07:53
தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
01-06-2026 | 23:02
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தித் துறை வாகனம் தேர்தலுக்கு ஒட்டப்பட்ட விளம்பரங்கள் புதிய ஆட்சி அமைத்தும் எடுக்கவில்லை
01-06-2026 | 22:20
நாள் முழுவதும் அலைந்து திரிந்த சிறகுகள், இப்போது மாலையின் பொன்னொளி போர்த்திய ஆதவனின் அரவணைப்பில் சிறகுகளை தளர்த்தி ஓய்வு எடுக்கின்றன இந்த புள்ளினங்கள். இடம்: குமாரசாமி குளம், தடாகம் சாலை, கோவை.
01-06-2026 | 22:19
திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்திருவிழாவை ஒட்டி, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
01-06-2026 | 19:48
மழை நீர் வடிகால் பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : யானை கவுனி மேம்பாலம் சந்திப்பு.
01-06-2026 | 15:45