உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியில் , மகிளா நீதிமன்றம் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.

14-11-2026 | 13:09


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் காய்ந்துள்ளது.

14-11-2026 | 13:08


ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை , மூடப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது .

14-11-2026 | 13:03


புதுச்சேரி அரசு நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அமைச்சர் சிவக்கொழுந்து இலவச சைக்கிள்களை வழங்கினார்.

14-11-2026 | 13:03


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடந்தது.

14-11-2026 | 10:06


சென்னை கிண்டி வெங்கடாபுரம் பகுதியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. 9.40 ஏக்கர் நிலத்தில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 தளங்கள் அடங்கிய இந்நிறுவனத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுதான் அதன் மாதிரி வரைபடம்.

14-11-2026 | 06:33


மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கொளத்தூர்- சீனிவாச நகர் இடையே சுரங்கம் தோண்டும் பணியை குறிஞ்சி என்ற ராட்சத இயந்திரம் வெற்றிகரமாக முடித்து வெளியேறியது. மொத்தம் 1080 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளது.

14-11-2026 | 06:27


சென்னை கேகேநகரில் உள்ள ஸ்பிரிங்பீல்டு மேல்நிலைப்பள்ளியில்,குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வாசிப்பு நிகழ்வு நடந்தது. இதில் தினமலர் பட்டம் இதழை வாசித்த மாணவர்கள்.

13-11-2026 | 22:25


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோவை பட்டேல் ரோடு காளீஸ்வர நகர் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

13-11-2026 | 22:25


குழந்தைகள் தினத்திற்கு வழங்கப்பட்ட கேக்கை, பரிமாற்றி , உண்ணும் குழந்தைகள். இடம்: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கவுண்டம்பாளையம் ராமசாமி நகர், கோவை

13-11-2026 | 22:24