உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சத்ய சாய்பாபாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இடம்: பிஎன் ரோடு, திருப்பூர்.

21-11-2026 | 06:49


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதியை முன்னிட்டு அங்கபிரதட்சனையில் ஈடுட்ட ஹிந்து முன்னணியினர்.

21-11-2026 | 06:49


திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று புதுச்சேரி இந்திரா சதுக்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

21-11-2026 | 06:48


புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.

21-11-2026 | 06:47


விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதேசி முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

21-11-2026 | 06:46


திருப்பரங்குன்றம் கோவிலும், மகா தீபம் ஏற்றப்படவிருக்கும் மலை மீதுள்ள தீபத்துாணும்.

20-11-2026 | 22:58


பைல் நேம் 2111 டிபிகே 001. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவ. 24-இல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதையடுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றியாக இந்து அமைப்பினர் தேங்காய் உடைத்தனர்

20-11-2026 | 21:16


நீலகிரி மாவட்டத் தலைநகரான ஊட்டியில் நிலவும் கடுமையான குளிர்(4.7 டிகிரி செல்சியஸ்) காரணமாக, அதிகாலையில் புல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உறைபனியின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவது இயற்கை எழிலையும், குளிரின் தீவிரத்தையும் காட்டுகிறது.

20-11-2026 | 20:15


சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜீவல்லரியின், தங்க சேமிப்பு திட்டமான டிஜி கோல்ட் மற்றும் சூப்பர் பிளக்ஸி 360 திட்டத்தை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் நிறுவனர் எஸ். ராஜரத்தினம் நேற்று துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - நிர்வாக இயக்குனர் சபாபதி, இயக்குனர் யோகேஷ் ரத்னம்,லாக்ஷினி ரோஷன் மற்றும் இயக்குனர் ரோஷன். இடம் : போரூர் சென்னை.

20-11-2026 | 19:37


விருதுநகரில் கேர்.ஏ.கே.பி.எஸ் மருத்துவமனை, சாரதா சக்தி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேல், நிகில் பரிசு வழங்கினர்.

20-11-2026 | 19:16