மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
மைசூரை சேர்ந்த சுமித்ரா ராஜு, 49, விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன் பின், தந்தையுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டார்.ஒப்பந்த ஊழியர் ராஜுவுடன், சுமித்ராவுக்கு திருமணம் நடந்தது. தற்போது மைசூரு பைதஹள்ளியில் வசித்து வரும் இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமண வயது நெருங்கி விட்டதால், கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதை உணர்ந்தார். வீட்டின் அருகில்
அப்போது, தனது வீட்டின் அருகில் உள்ள இரு சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்யும் மெக்கானிக் கடை நினைவுக்கு வந்தது. மெக்கானிக் கடை உரிமையாளர் சுரேந்திரனிடம், 'மெக்கானி பணி கற்றுத்தருகிறீர்களா' என்று கேட்டார். ஆச்சரியப்பட்ட சுரேந்திரன், சுமித்ராவுக்கு சொல்லித்தர துவங்கியது மட்டுமின்றி ஊக்கப்படுத்தியும் வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக பசவேஸ்வரா சாலையில் 'சுசித்ரா ஆட்டோ சர்வீஸ் சென்டர்' பெயரில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். பயிற்சிக்கு தயார்
சுமித்ரா கூறுகையில், ''இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது வாகனத்தின் சிறிய பழுதில் இருந்து இன்ஜின் கழற்றி சரி செய்யவும் தெரிந்து கொண்டேன்.''என் ஒர்க் ஷாப்பில் பெரும்பாலும் ஸ்கூட்டர் வாகனங்கள் தான் பழுது பார்க்கப்படுகின்றன. பெண்களில் பெரும்பாலானோர், இத்தகைய வாகனங்களை தான் ஓட்டுகின்றனர். இதுவே, என்னை இத்துறையில் சேர ஊக்கம் அளித்து உள்ளது. அதுமட்டுமின்றி, மெக்கானிக் தொழில் கற்றுக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு, பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளேன்,'' என்றார்.இது குறித்து அவருக்கு பயிற்சி அளித்த மெக்கானிக் சுரேந்திரன் கூறுகையில், ''மெக்கானிக் பணி கற்றுக்கொள்வது குறித்து, என்னிடம் சுமித்ரா கேட்டார். அப்போது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனது 28 ஆண்டுகால பணியில், பயிற்சி அளிக்கும் முதல் பெண் சுமித்ரா தான். பெண்கள் நினைத்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு, அவர் உதாரணமாக திகழ்கிறார்,'' என்றார்.ஆண்கள் நிறைந்த மெக்கானிக் பணி உலகில், 'மெக்கானிக் ராணி'யாக சுமித்ரா வலம் வருகிறார்.
11-Mar-2025