உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / 1...2...3... கேம் ஆன்

1...2...3... கேம் ஆன்

 உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் நடக்கும் தேசிய அளவிலான சப் - ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், சத்தீஸ்கர் அணியை கர்நாடக மகளிர் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் கர்நாடக அணி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.  11வது ஏ.ஜி.ஏ., மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டிகள் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. இந்த போட்டிகள், பெங்களூரு அசோக் பப்ளிக் பள்ளியில் நடக்கின்றன. இரு பாலரும் கலந்து கொள்ளலாம். 10, 12, 14, 16 வயதுக்கு உட்பட்டோருக்கு என, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் தவகல்களுக்கு 82775 97118, 95383 65129 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  தார்வாட் மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் நடத்தும் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் வரும் 24 முதல் 26ம் தேதி வரை நடக்கின்றன. இதில் பங்கேற்க மற்றும் மேலும் விபரங்களுக்கு 63613 98510 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் நடக்கும் 'ஏசியன் ஹேபால் சாம்பியன்ஷிப்'பில் இந்தியாவின் சார்பாக களமிறங்கிய, நம் மாநிலத்தை சேர்ந்த வித்யா வெண்கல பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.  பி.சி.சி.ஐ., நடத்தும் சீனியர் பெண்களுக்கான டி - 20 போட்டியில், ஹிமாச்சல் பிரதேச மகளிர் அணியை, கர்நாடக மகளிர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை