உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  தேசிய பாரா பேட்மின்டன்

 தேசிய பாரா பேட்மின்டன்

- நமது நிருபர் - தேசிய பாரா பேட்மின்டன் போட்டிகளில், இரண்டு தங்கம் உட்பட 11 பதக்கங்களை கர்நாடகா வென்று உள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், 7வது தேசிய பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த மாதம் 26ம் தேதி துவங்கின. நேற்று முன்தினம் நிறைவு பெற்றன. இப்போட்டியில் இரண்டு தங்கம் உட்பட, 11 பதக்கங்களை கர்நாடகா வென்றது. பெண்களுக்கான சக்கர நாற்காலி ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பல்லவி தங்கம் வென்றார். அம்மு மோகன், தனேஷ்வரி, ஜனனி, சித்தம்மா, ஜம்ஷாத் ஆகியோர் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர். நேற்று காலை பெங்களூரு திரும்பிய இவர்களுக்கு, விளையாட்டு வீரர், வீராங்கனையர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விரைவில் முதல்வர் சித்தராமையாவை சந்திக்க வைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை