உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / மழைக்காலத்தில் சேற்றில் விளையாட்டு

மழைக்காலத்தில் சேற்றில் விளையாட்டு

குடகில் மழை வெளுத்து வாங்குகிறது. ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதற்கிடையே மக்களை மகிழ்விக்க, குடகில் சேற்றில் விளையாடும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆண்களும், பெண்களும் போட்டியில் பங்கேற்று உற்சாகத்துடன் விளையாடினர். குடகு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம், குடகு பிரஸ் கிளப் ஒருங்கிணைப்பில், இரண்டு நாட்களுக்கு முன், சேற்றில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மடிகேரி அருகில் வசிக்கும் மல்லன பெள்ளியப்பா என்பவரின் வயலில் சேற்றில், பத்திரிகையாளர்களுக்கான கைப்பந்து, கயிறு இழுத்தல், ஓட்ட பந்தயம் என, பல்வேறு விளையாட்டுகள் நடந்தன. அனைத்து பிரிவிலும் ஆறு அணிகள் பங்கேற்றன. கைப்பந்து பிரிவில் 'நாட்டி பாய்ஸ்' அணியினர், முதலிடத்தில் வெற்றி பெற்றனர். 'மட் பீல்டர்ஸ்' அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில், 'மட் பைட்டர்ஸ்' குழுவினர் முதலிடமும், 'நாட்டி பாய்ஸ்' அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். சேற்றில் நடந்த ஓட்ட பந்தயத்தில் மகளிர் பிரிவில், வத்சலா முதல் இடத்திலும், சவிதா இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கோபால் சோமய்யா முதலிடம்; ரமேஷ் குட்டப்பா இரண்டாவது; பார்த்தா சின்னப்பா மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஜூனியர் பிரிவில் இஸ்மாயில் முதலிடத்தையும், திவாகர் ஜாக்கி இரண்டாவது இடத்தையும், நவீன் டிசோசா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். சேற்றில் விளையாடும் விளையாட்டை காண, ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். விளையாட்டில் பங்கேற்றவர்களை, கைத்தட்டி, விசில் அடித்து உற்சாகப்படுத்தினர். மழைக்காலத்தில் குடகின் பல்வேறு இடங்களில், சேற்றில் விளையாட்டு நடப்பது வழக்கம். விவசாயிகள் சங்கம், பத்திரிகையாளர்கள் சங்கம், இளைஞர்கள் சங்கம் என, பல பல சங்கங்கள், அமைப்புகள் சார்பில் விளையாட்டுகள் நடத்தப்படும். சங்கங்கள், அமைப்பினருடன் உள்ளூர் விளையாட்டு வீரர்களும் பங்கேற்பர். குறிப்பாக விவசாயிகளுக்கு இந்த விளையாட்டுகள் அதிக உற்சாகத்தை அளிக்கிறது - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி