உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  குடகில் விளையாட்டு மையம்

 குடகில் விளையாட்டு மையம்

- நமது நிருபர் - குடகு மாவட்டம், விளையாட்டுக்கு பிரபலமான மாவட்டமாகும். பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்கள், இந்த மாவட்டத்தில் உள்ளனர். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, தேசிய தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க, கர்நாடக விளையாட்டு துறை திட்டமிட்டுள்ளது. இம்மாவட்டத்தில், அனைத்து வசதிகள் அடங்கிய, நவீன விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இது குறித்து, விளையாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், வி.பாடகா கிராமத்தில், புதிய விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இங்கு தங்கி பயிற்சி பெற, அனைத்து வசதிகளும் செய்யப்படும். இளம் விளையாட்டு வீரர்களுக்கு, மிகவும் உதவியாக இருக்கும். இந்த விளையாட்டு பயிற்சி மையத்துக்கு, 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணிகள் துவங்கி, துரிதமாக நடந்து வருகின்றன. பணிகள் முடிந்தால், விளையாட்டு வீரர்களுக்கு ஒரே கூரையின் கீழ், அனைத்து விளையாட்டுகளின் பயிற்சி, தங்குமிடம் கிடைக்கும். அதிநவீனமாக அமைக்கப்படும் மையத்தில், உள்விளையாட்டு அரங்கம், ஜிம், நீச்சல் குளம் உட்பட, பல்வேறு வசதிகளும் இருக்கும். இதற்கு முன், குடகு மாவட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற வேண்டுமானால், வெளி மாநிலங்களுக்கு சென்றனர். இனி மாவட்டத்திலேயே, தரமான பயிற்சி பெறலாம். கிராமப்புற சிறார்கள், இளம் பெண்கள், இளைஞர்களின் விளையாட்டு திறனை அடையாளம் கண்டு, தேவையன பயிற்சியளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் நோக்கில், இந்த பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி