உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  ஸ்கேட்டிங் ஷூவுடன் நடனமாடி மாணவி சாதனை

 ஸ்கேட்டிங் ஷூவுடன் நடனமாடி மாணவி சாதனை

நடனத்தில் பலரும் பலவிதமான சாதனைகள் செய்துள்ளனர்; விருதுகளை அள்ளியுள்ளனர். தற்போது மங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர்: தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், சிலிம்பி கிராமத்தில் வசிப்பவர் சுஷ்ரவ்யா, 20. இவர் மங்களூரின் செயின்ட் அக்னீஸ் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி., படிக்கிறார். இவர் ஸ்கேட்டிங் நடனத்தில், உலக சாதனை செய்துள்ளார். டிசம்பர், 12ம் தேதி காலை 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை தொடர்ந்து நான்கு மணி நேரம் நடனமாடினார். உதய்குமார், சசிரேகா தம்பதியின் மகளான சுஷ்ரவ்யா, 14 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி பெறுகிறார். இவருக்கு சுமன் ஸ்ரீகாந்த் பயிற்சி அளிக்கிறார். இரண்டு ஆண்டுகளாக ஸ்டேட்டிங் அணிந்தபடி நடனமாடி பயிற்சி பெற்று, அந்த விஷயத்தில் சாதனை படைத்துள்ளார். 'கோல்டன் புக் ஆப் வேர்ல்டு ரிகார்டு' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு கோல்டன் புக் ஆப் ஒர்ல்டு ரிகார்டின் ஆசிய தலைவர் மனீஷ் வைஷ்ணோயி பதக்கமும், சான்றிதழும் அளித்து கவுரவித்தார். சுஷ்ரவ்யாவுக்கு, 12 மணி நேரத்துக்கும் மேலாக, ஸ்டேட்டிங் நடனமாடி சாதனை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளாக இருந்தது. ஆனால், நடுவில் வாந்தி வந்ததால் நான்கு மணி நேரத்துடன் நடனத்தை முடித்து கொண்டார். இதற்கு முன் மூன்று மணி நேரம் நடனமாடி, சாதனை செய்திருந்தார். தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். இதுகுறித்து, கோல்டன் புக் ஆப் ஒர்ல்டு ரிகார்டின் ஆசிய தலைவர் மனீஷ் வைஷ்ணோயி கூறியதாவது: சுஷ்ரவ்யா, ஸ்டேட்டிங் மூலமாக நடனமாடி சாதனை செய்துள்ளார். அவரது சாதனை சாதாரணமானது அல்ல. கால்களில் ஸ்கேட்டிங்குடன் ஒரு மணி நேரம் நடனமாடுவதே கஷ்டம். இவர் நான்கு மணி நேரம், ஸ்கேட்டிங் நடனமாடினார். இவ்வாறு அவர் கூறினார். சுஷ்ரவ்யாவின் தாய் சசிரேகா கூறியதாவது: என் மகள் சிறு வயதில் இருந்தே, பரதம் கற்கிறார். ஸ்கேட்டிங் அணிந்து, நடனமாடி பயிற்சி பெற்றார். பரத நாட்டியத்தில் ஜூனியர், சீனியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். ஸ்கேட்டிங் மூலமாக பரதமாடியுள்ளார். எங்கள் மகளின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம். ஸ்கேட்டிங் மற்றும் பரத நாட்டியத்தில், சாதிக்க வேண்டும் என, விரும்பினார். அதை நாங்கள் ஊக்கப்படுத்தினோம். அவரது கல்லுாரி நிர்வாகத்தினரும், தேவையான ஒத்துழைப்பு கொடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை