உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நாவிற்கு சுவையூட்டும் தம்பிட்டு

நாவிற்கு சுவையூட்டும் தம்பிட்டு

கர்நாடகாவின், பல மாவட்டங்களில் 'தம்பிட்டு' என்ற இனிப்பு, மிகவும் பிரபலம். பண்டிகை நாட்கள், விரத நாட்களில் இந்த இனிப்பு தவறாமல் இடம் பெறும். கோவில்களில் நைவேத்தியமாக வினியோகிப்பர். தம்பிட்டு இனிப்பை எப்படி செய்வது என, பார்க்கலாமா.

செய்முறை

முதலில் அரிசியை கழுவி, ஊற வைக்க வேண்டும். அதன்பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதில் வேர்க்கடலை, ஏலக்காய், அவல் பொறியை போட்டு அரைக்கவும்.அதன்பின் ஸ்டவ் பற்ற வைத்து, அடிகனமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு பாகு தயாரிக்கவும். பாகில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள அரிசி, எள், கொப்பரை துருவலை போடவும். நன்றாக கலந்து சிறு, சிறு உருண்டை பிடித்தால், சுவையான தம்பிட்டு தயார்.உடலுக்கு ஆரோக்கியமானது. குழந்தைகளும், வயதானவர்களும் விரும்பி சாப்பிடுவர். பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, விரும்பிய போது செய்து சாப்பிடலாம். செய்வதும் மிகவும் எளிது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி