உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / முட்டை தவா மசாலா செய்யலாமா?

முட்டை தவா மசாலா செய்யலாமா?

முட்டைய வச்சு ஆம்லெட், ஆப் பாயில், முட்டை பிரியாணி, பொடி மாஸ் என பல செய்து இருப்பீங்க. ஆனால், முட்டைய வச்சு, சற்று வித்தியாசமாக 'முட்டை தவா மசாலா' செய்து இருக்கீங்களா. ஒரு முறை செய்து பாருங்க. அப்புறம் அதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க.இந்த முட்டை தவா மசாலா, தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்றவைக்கு சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட்டு பாருங்க, சுவை பிரமாதமாக இருக்கும். ஹோட்டல் சுவையில, வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதை செய்யும் போது வீடே ஒரே வாசனையாக இருக்கும். எவ்வளவு அதிகமா செய்தாலும், கண்டிப்பாக மீறாது. இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டையை வேக வைத்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, அந்த முட்டைகளின் ஓட்டினை உரித்து எடுக்கவும். அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.பின், ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இதில், நறுக்கி வைத்த முட்டைகளை போடவும். மிளகாய்த்துாள், உப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே தவாவில் எண்ணெய், பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.இதனிடையில், ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த விழுதையும் சேர்த்து தவாவில் போட்டு வதக்கவும். இதில், குழம்புமிளகாய் துாள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், வறுத்த முட்டைகளை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் துாவி இறக்கினால், சுவையான முட்டை தவா மசாலா ரெடி - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ