மேலும் செய்திகள்
முட்டைக்கு மாற்று 'வெஜ் பன்னீர் புர்ஜி'
15-Feb-2025
தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் உட்பட விசேஷ நாட்களில், 'பகாரா ரைஸ்' பரிமாறப்படும். தமிழகத்தில் குஸ்கா போன்று தெலுங்கானாவில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் பகாரா உள்ளது. இது பிரியாணி சுவையில் இருப்பதால், 'வெள்ளை பிரியாணி' என்றும் அழைக்கின்றனர். செய்முறை
ஒரு கப் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடுங்கள். குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின் இரண்டு இலவங்கம், 4 கிராம்பு, ஒரு அன்னாசி பூ, 2 மராட்டி மொக்கு, கொஞ்சம் ஷாகி ஹீரா, 2 பிரியாணி இலை போட்டு வதக்கவும். அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி போட்டு, வெங்காயம் பொன் நிறத்திற்கு மாறும் வரை வதக்கவும். அதை தொடர்ந்து, நான்கு பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின் ஒரு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி சேருங்கள். தக்காளி சேர்ப்பது கட்டாயமில்லை. தலா ஒரு கட்டு புதினா, கொத்தமல்லி போடுங்கள். பகாரா சாதத்தின் சுவையை நிர்ணயிப்பது இவை இரண்டுமே. போட்ட சில விநாடிகளிலேயே சுருங்கிவிடும். தேவையான அளவு உப்பு போட்டு, ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். இதன்பின் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். அரிசியை போட்ட பின், அனைத்தையும் கலந்து விட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் வைக்கவும். 4 விசில் அடிக்கும் வரை காத்திருங்கள்; பின் எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கள்.இதற்கு சிக்கன், மட்டன் குழம்பு ஊற்றி சாப்பிடுங்கள்... அருமையான ருசியை உணர முடியும். - நமது நிருபர் -
15-Feb-2025