உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நாவை நடனமாட வைக்கும் ஹனி சில்லி பொட்டெட்டோ ரெசிபி

நாவை நடனமாட வைக்கும் ஹனி சில்லி பொட்டெட்டோ ரெசிபி

எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது உருளைக்கிழங்கின் சிறப்பம்சமாக உள்ளது. இதில் விட்டமின் சி, பொட்டாசியம், நார்சத்து அதிகம் உள்ளது. செரிமான பிரச்னையை தீர்க்கவும் உதவுகிறது.வீடுகளில் உருளைக்கிழங்கை வைத்து மசாலா, உருளைக்கிழங்கு 65, பொறியல், பிரஷ் பிரட் என்று பல விதமான டிஷ்களை வீட்டில் செய்து சாப்பிட்டு இருப்போம். உருளைக்கிழங்கு பிரே என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். நாவை நடனமாட வைக்கும் சுவையில், உருளைக்கிழங்கு சில்லி பொட்டெட்டோ ரெசிபியும் உள்ளது.

செய்முறை

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு பாத்திரம் வைத்து, தண்ணீர் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கை இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கில் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து பொரித்து எடுக்கவும்.வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், குடைமிளகாய், மிளகாய் துாள், மிளகு துாள், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை ஆப் செய்து விடவும்.தேன் சேர்த்து கலந்துவிட்டு, பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறிவிட்டால் சுவையான ஹனி சில்லி பொட்டெட்டோ தயார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை