மேலும் செய்திகள்
இனிப்பு பிரியர்களுக்கு கேரட் ரசமலாய்
07-Feb-2026
சுவையூட்டும் பிரட் பரோட்டா
07-Feb-2026
தேவையான பொருட்கள் l கேரட் - அரை கிலோ l நெய் - கால் கப் l பால் - அரை லிட்டர் l பாதாம் - 10 l முந்திரி பருப்பு - 15 l தேங்காய் துருவல் - கால் கப் l வெல்லம் - அரை கப் l சர்க்கரை - கால் கப் l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன் செய்முறை முதலில் கேரட்களை நன்றாக கழுவவும். மேற்தோலை நீக்கி விட்டு சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றவும். காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கேரட்டை சேர்த்து, மிதமான தீயில் ஐந்தாறு நிமிடம் வதக்கவும். காய்ச்சி வைத்துள்ள அரை லிட்டர் பாலை, கேரட்டில் ஊற்றி கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அதன்பின் பாதாம், முந்திரிப்பருப்பு, கொப்பரை தேங்காயை மிக்சியில் போட்டு மாவாக அரைக்கவும். கேரட் வெந்துவிட்டால் நெய் தனியாக பிரிந்து மேலே மிதக்கும். அந்த பதம் வந்ததும், பாதாம், முந்திரிப்பருப்பு, கொப்பரை தேங்காயை போட்டு கைவிடாமல் கிளறவும். இந்த கலவை கொதி வந்ததும், துருவி வைத்துள்ள வெல்லத்தை போட்டு கிளறவும். அதன்பின் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து, சில நிமிடம் வேக வைக்கவும். இதில் நெய்யை சிறிது, சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்த பின், ஏலக்காய் துாள் சேர்க்கவும். அதன்பின் தட்டில் நெய் தடவி, இந்த கலவையை பரப்பி விருப்பமான வடிவத்தில் வெட்டினால், சுவையான கேரட் பர்பி தயார். விருப்பம் இருந்தால், உலர்ந்த பழங்களை பொடியாக நறுக்கி, பர்பி மீது துாவி அலங்கரிக்கலாம். மாறுபட்ட வெல்லமும், சர்க்கரையும் சேர்ப்பதால், சுவை அதிகரிக்கும். தற்போது கேரட்டின் விலையும் குறைவாக உள்ளது. வாங்கி செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்.
07-Feb-2026
07-Feb-2026