மேலும் செய்திகள்
காளான் பெப்பர் பிரை
12-Oct-2025
அசைவ உணவு பிரியர்களுக்கு வார இறுதி நாட்கள் வந்து விட்டாலே போதும். வீட்டில் சிக்கன், மட்டன், மீன், இறாலில் பிரியாணி செய்து சாப்பிடுவர். ஆனால் ஆம்லெட்டில் கூட சூப்பரான பிரியாணி செய்யலாம். ஆம்லெட்டில் பிரியாணியா என்று யோசிக்கலாம். ஒரே ஒரு முறை செய்து பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். செய்முறை முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அதனுடன், மஞ்சள் பவுடர், மிளகு பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசை கல்லில் ஆம்லெட் ஆக ஊற்றி எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய், சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலையுடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். கொத்தமல்லி இலை, புதினா இலைகள் சேர்த்து மிளகாய் பொடி, பிரியாணி மசாலா சேர்த்து நன்கு வதக்கி தயிர் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வெட்டி வைத்துள்ள ஆம்லெட் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அரிசியை கழுவி சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான ஆம்லெட் பிரியாணி ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். - நமது நிருபர் -
12-Oct-2025