முடக்கத்தான் தோசை
- நமது நிருபர் -: மூட்டு வலி, முடக்குவாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வாத நோய்களுக்கு, முடக்கத்தான் கீரை சிறந்த தீர்வாகும். இந்த முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி, முடக்கத்தான் தோசை செய்து பார்ப்போமா... தேவையான பொருட்கள்: l தோசை மாவு - ஒரு கப் l முடக்கத்தான் இலை - 2 கைப்பிடி அளவு l உளுத்தம் பருப்பு - 1 டேபிஸ்ஸ்பூன் l சின்ன வெங்காயம் - 25 l பூண்டு - 15 பல் l இஞ்சி - 2 துண்டு l கறிவேப்பிலை - சிறிதளவு l கொத்தமல்லி தழை - சிறிதளவு l வரமிளகாய் - 8 l தேங்காய் - 2 துண்டு l புளி - 15 கிராம் l கல் உப்பு - தேவையான அளவு l நல்லெண்ணெய் - சிறிதளவு செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க விடவும். பின், வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தேங்காய் துண்டுகளுடன் புளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின், கொத்தமல்லி தழை, முடக்கத்தான் இலையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின், ஆற விட்டு மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். தயாராக உள்ள மாவில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். ஸ்டவ்வில், தோசைக்கல் சூடானதும், மாவை ஊற்றி சற்று மெல்லியதாக தேய்க்கவும். மெதுவான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுவென்று சுட்டெடுத்தால், சுவையான, ஆரோக்கியமான, மணமான முடக்கத்தான் தோசை தயார்!