மேலும் செய்திகள்
மட்டன் இஞ்சி விரவல்
31-Aug-2025
வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, உருளைக்கிழங்கு குருமா, பன்னீர் பட்டர் மசாலா, தக்காளி தொக்கை தான் தொடு கறியாக வழக்கமாக வைத்து சாப்பிடுவர். ஒரே மாதிரியாக செய்து சாப்பிடும் போது போர் அடித்து விட்டதா; சற்று மாறுதலாக செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா. அப்படி என்றால் குடை மிளகாய் - மக்காச்சோளம் காம்பினேஷனில் 'கிரேவி' செய்து சாப்பிடலாமே. செய்முறை அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து, வெண்ணெயை போட்டு சீரகம் சேர்த்து நன்கு தாளித்து கொள்ளவும். நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் பவுடர், மஞ்சள் பவுடர், கரம் மசாலா பவுடர், மல்லி பவுடர் தேவையான அளவு போட்டு, உப்பு, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் இன்னொரு வாணலியில் குடைமிளகாய், மக்காச் சோளத்தை சேர்த்து வெண்ணெய் சேர்த்து வதக்கி அதை கிரேவியில் சேர்த்து விடவும். பத்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலையை துாவி இறக்கினால், குடை மிளகாய் - மக்காச்சோளம் காம்பினேஷனில் கிரேவி ரெடி. தேங்காய் சாதம், நெய் சாதம், புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதத்திற்கு கூட சைடு டிஸ் ஆக வைத்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் - நமது நிருபர் -.
31-Aug-2025