பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்
1 கிலோ எலும்பில்லா மீன் துண்டுகள் உப்பு ஒரு டீஸ்பூன் கடுகு, சர்க்கரை, எண்ணெய் தேவையான அளவு பாஸ்மதி அரிசி அரை கிலோ கரம் மசாலா 10 கிராம் கால் கிலோ வெங்காயம் 100 கிராம் பூண்டு மிளகு பவுடர் அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்துமல்லி தழை தேவையான அளவு செய்முறை
அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கடுகு, சர்க்கரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். இதில் பாஸ்மதி அரிசி போடவும். தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். கரம் மசாலா, மிளகு பவுடர், உப்பு சேர்த்து அனைத்தையும் கிளறி விடவும். அரிசி பாதி வெந்து வரும் நேரத்தில், எலும்பில்லா மீன் துண்டுகளை போட்டு, பத்து நிமிடங்கள் வரை குக்கரை மூடி வைக்கவும். அதன்பின், குக்கரை ஆப் செய்ய வேண்டும். பிரியாணியை தம் போட்டு கொத்துமல்லி இலைகளை துாவி இறக்கினால் சூடான, சுவையான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி தயார். இதற்கு தயிரில் ஊற வைத்த வெங்காயம் அல்லது இறால் கறியை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.