உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நொறுக்குகள்

நொறுக்குகள்

♨ வாழைக்காய் வறுவல் செய்யும்போது மசாலாவில் சிறிதளவு சிக்கன் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும். ♨ வாழைப்பூ துவையல் செய்யும்போது நெய் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும். ♨ பிரியாணி செய்யும்போது வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டியது அவசியம். ♨ பொரியல் செய்யும்போது காரப் பொடிக்கு பதிலாக தேங்காய் பொடி சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும். ♨ ஊறுகாய் செய்யும்போது கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் ஊறுகாய் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். ♨ காளான் வறுவல் செய்யும்போது மிளகுத்துாள் சேர்த்து செய்தால் சுவை கூடும். ♨ பொரியலுக்கு தேங்காய் துருவல் போடுவதற்கு பதிலாக வறுத்த வேர்க்கடலையை அரைத்து சேர்க்கலாம். ♨ மீனை வறுக்கும் முன் சிறிது மஞ்சள் துாள், உப்பு தடவி 10 நிமிஷம் வைத்தால் எண்ணெய் குறைவாக சிதறும். ♨ சப்பாத்தி சூடாக இருக்க சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கலாம். ♨ உருளைக்கிழங்கு குருமா செய்யும்போது பட்டை, சோம்பு, கிராம்பு அனைத்தையும் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். ♨ தோசை மாவு புளித்து விட்டால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் சேர்த்து பணியாரமாக செய்தும் சாப்பிடலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை