மேலும் செய்திகள்
பழைய சோற்றில் 'இன்ஸ்டன்ட் புலாவ்'
31-Jan-2026
- நமது நிருபர் -: வற்றல், வடாகத்திற்கு கூழ் காய்ச்சும் போது, சிறிதளவு பால் சேர்த்தால் வடாகம் வெண்மையாக இருக்கும். வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது, தோசையின் நடுப்பகுதியில் சிறிய ஓட்டை போட்டு, அதில் எண்ணெய் ஊற்றினால் ஊத்தப்பம் விரைவாக வெந்துவிடும். வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரத்திற்கு பழுக்காமல் இருக்கும். முருங்கை பிஞ்சுகளை நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால், ரசம் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும் போது, ஒரு மாங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து பொரித்தால், பாகற்காயில் கசப்பு குறைந்து விடும். சமைத்து வைத்த கீரை மிச்சம் ஆகிவிட்டால், உளுந்து மாவை அரைத்துக் கீரை வடை செய்து பயன்படுத்தலாம். கையில் தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு வாழைப்பூவை நறுக்கினால், கையில் பிசுபிசுப்பு ஒட்டாது. முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிது எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பிறகு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். 2 கப் கோதுமை மாவில் கால் கப் பெரிய ரவாவை சேர்த்தால் பூரி உப்பலாக வரும். கொத்துமல்லி துவையல் செய்யும் போது தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும்.
31-Jan-2026