உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த அவல் வடை

 சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த அவல் வடை

- நமது நிருபர் - வடை என்றாலே உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை போன்றவை என நம் அனைவரின் நினைவுக்கும் வரும். இதற்கு மாற்றாக, அதிக ஊட்டச்சத்து நிறைந்த 'அவல் வடை' செய்யலாம். தேவையான பொருட்கள் * அவல் - 1 கப் * சீரகம் - 2 தேக்கரண்டி * கொத்தமல்லி - சிறிதளவு * பச்சை மிளகாய் - 5 * வெங்காயம் - 2 * உப்பு - சுவைக்கு ஏற்ப * எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செயல்முறை  அவலை நன்றாக கழுவ வேண்டும். பின், தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு பின், மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்  வடை செய்வதற்கு தேவையான சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்  பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற வைத்த அவல், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்  இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு, சீரகம், அரை கப் கடலை மாவு போன்றவற்றையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வடை பதத்திற்கு உள்ளதா என்பதைப் பார்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இப்போது அவல் வடை செய்வதற்கு தேவையான மாவு தயார்  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் போதும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த அவல் வடை ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ